நீலகிரியில் வீடுகளை சூறையாடி வரும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட, முதுமலை யானைகள் முகாமில் இருந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக, சேரங்கோடு, பிதர்காடு, சேரம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடுகளை சூறையாடும் புல்லட் ராஜா என்கிற காட்டு யானை,மக்களின் உடமைகளை துவம்சம் செய்து வருகிறது.