மயிலாடுதுறை மாவட்டம் முட்டத்தில் இரட்டை படுகொலை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் புல்லட் ஓட்டி சென்றதாக தலித் இளைஞர் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து மயிலாடுதுறையில் விசிகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மயிலாடுதுறையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கோரியும், படுகொலை செய்யப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினருக்கு அரசு இழப்பீடு வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.