கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இரவு நேரத்தில் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு மர்மநபர்கள் BSNL ஜங்ஷன் பாக்ஸை திருடி சென்ற வீடியோ காட்சி வெளியானது. பைக் மற்றும் ஜேசிபி இயந்திரத்தில் வந்த மர்ம நபர்கள், அங்கு சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த BSNL ஜங்ஷன் பாக்ஸை திருடி சென்று அதற்குள் இருக்கும் இரும்பு கம்பியை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.