விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை கிராமத்தில் ஒரு அடி இடத்துக்காக சகோதரர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், அண்ணன் மனைவி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெரியசெவலை கிராமத்தில் சகோதரர்களான தாமோதரன் மற்றும் சுந்தரம் ஆகியோர் 15 செண்ட் நிலத்தில் அருகருகே வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.அண்ணன் தாமோதரன் கூடுதலாக ஒரு அடிக்கு மதில் சுவர் கட்டிவிட்டதாக வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாமோதரனின் மனைவி நரசம்மாள், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.