சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் கோவில் குளத்தில் மூழ்கி, அண்ணன், தம்பியான சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், உயிரிழந்த சிறுவர்கள் ஜெயலெட்சுமி என்பவரின் மகன்களான விஷ்ணு மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா என்பதும், விடுமுறை தினம் என்பதால் குளத்தில் மீன்பிடிக்க சென்ற போது தவறி விழுந்ததும் தெரிய வந்தது.