தருமபுரி அருகே தங்கையை அழைத்து சென்ற ஆத்திரத்தில் காதலன் வீட்டை அடித்து உடைத்ததோடு, கயிறு தயாரிக்கும் தேங்காய் நார்களுக்கு தீ வைத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. கொல்லப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்த முனியம்மாள் என்பவருடைய இரண்டாவது மகன் ஏழுமலை உறவுக்கார பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த பெண்ணை அழைத்து சென்றதால் ஆத்திரமடைந்த பெண்ணின் சகோதரர் ஏழுமலை வீட்டிற்கு சென்று பொருட்களை அடித்து உடைத்து ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.