சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே இரு சக்கர வாகனத்தை இரவல் வாங்கிச் சென்றதில் ஏற்பட்ட தகராறில், தம்பியை கொலை செய்த அண்ணனை போலீஸார் கைது செய்தனர். மடப்புரம் கீழக்களம் காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன்கள் தர்மேந்திரன், தயா என்கிற தயாளன் இருவரும் கட்டிட சென்ட்ரிங் தொழிலாளிகள். இந்த சூழலில், தர்மேந்திரனின் இரு சக்கர வாகனத்தை தயாளன் இரவல் வாங்கி வெளியில் சென்றுவிட்டு தாமதமாக வந்ததால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, கோடரியை எடுத்து இரு சக்கர வாகனத்தை தயாளன் சேதப்படுத்தியதால் ஆத்திரமடைந்த தர்மேந்திரன், அரிவாளை எடுத்து அவரை வெட்டினார்.