திருவண்ணாமலை அண்ணமலையார் கோவிலுக்கு வாகனங்களில் வரும் பக்தர்களிடம் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் என்ற பெயரில் சிலர் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக வாகனம் நிறுத்துமிடத்திற்கு டெண்டர் எடுத்தவர்கள், கார் பார்க்கிங் செய்யும் பக்தர்களிடம் புரோக்கர்கள் மூலம் கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது.