கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே வீட்டுமனை அங்கீகாரம் வழங்க லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் மற்றும் அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். வீட்டுமனை அங்கீகாரம் பெற அணுகிய தன்னிடம் ஊராட்சி செயலர் ரங்கசாமி, முதலில் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு, மேலும் 19 ஆயிரம் ரூபாய் கேட்டதாக ராஜபிரபாகரன் என்பவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசாரின் அறிவுறுத்தலின்படி ராஜபிரபாகரன் பணத்தை கொடுத்தபோது, அதை வாங்கிய ரங்கசாமி மற்றும் பணத்தை வாங்கி கொடுத்த உதவியாளர் பூபதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.