ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், கணக்கில் வராத 3 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், செயற்பொறியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். செயற்பொறியாளரான சேகர் என்பவர், ஒப்பந்த பணிகளை வழங்க ஏழரை சதவீதம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரை அடுத்து சோதனை நடந்தது.