கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே வாக்கூர் கிராமத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். வாக்கூர் மேலத்தெருவை சேர்ந்த தேர்விஜயன், தரசூர் கிராமத்தில் உள்ள தனது அண்ணன் நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பம் செய்திருந்தார். அதற்கு வாக்கூர் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமாரும், உதவியாளர் ரமேஷும் 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதால், அதிர்ச்சியடைந்த தேர்விஜயன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.இதையும் படியுங்கள் : கல்வராயன் மலைப் பகுதியில் மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சி வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராயம் பறிமுதல்