கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில், வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, உதவி மின்பொறியாளர் உட்பட இருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். உதவி மின்பொறியாளர் சிவகுரு, வணிக ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர், ராஜேந்திரன் என்பவரிடம் அவரது வீட்டுக்கு மும்முனை மின் இணைப்பு கொடுக்க 35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.