நீலகிரி மாவட்டம் குன்னூரில், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியரிடம் 2 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, மாவட்ட தொடக்க கல்வி அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். சந்தோஷ் என்ற அந்த அதிகாரி, ஆசிரியர் ஜான் சிபு மானிக் என்பவரிடம் அவரது பணி நிரந்தர ஆணை மற்றும் நிலுவைத் தொகையை வழங்க லஞ்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது.