திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே ஏரியில் வண்டல் மண் அள்ள 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, நீர்ப்பாசன துறை உதவி செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். விலாசபுரத்தை சேர்ந்த நரசிம்மனிடம், லஞ்சம் பெறும் போது உதவி செயற்பொறியாளர் ரமேஷ் கையும் களவுமாக சிக்கினார்.