கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தக்கரையில் பிறப்பு சான்றிதழ் திருத்தம் செய்ய 3 ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வருவாய் உதவி அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். கொட்டாரப்பட்டியை சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் தனது பெண் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் திருத்தம் செய்ய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த உதவி அலுவலர் ஜெய்கணேஷை அணுகியபோது, அவர் 3500 ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார்.