திருத்தணியில் தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சு திணறி பச்சிளம் குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாய்பாபா நகரை சேர்ந்த பிருத்விராஜ் - சுவாதி என்ற தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருக்கும் நிலையில், 62 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தைக்கு இரவு தாய்ப்பால் கொடுத்துள்ளார் சுவாதி. அப்போது குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில், சுமார் 2 மணி நேரத்திற்கு வீட்டிலேயே வைத்து பார்த்ததில் குழந்தை அசைவற்று இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சுத்திணறி 62 நாட்களான பச்சிளம் குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.