சென்னையில் நடைபெற்ற மார்பக புற்றுநோய் மற்றும் உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆயிரத்து 700 பெண்கள் கலந்துகொண்டு ஒரே நேரத்தில் புடவை மாற்றி, சிகை அலங்காரம் மற்றும் முக ஒப்பனை செய்து புதிய உலக பதிவு யூனியன் கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தனர்.