திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே ஒரே இரவில் அடுத்தடுத்து 4 வீடுகளின் பூட்டை உடைத்து 57 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டுள்ள மர்மநபர்கள் கதவுகளை உடைத்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.