விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் விணாக வெளியேறியது. இரட்டனையில் இருந்து நீர்தேக்க தொட்டிக்கு செல்லும் குடிநீர் இணைப்பை சரி செய்வதற்காக பள்ளம் தோண்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வெளியேறியது. அப்போது அருகில் இருந்த மளிகை கடையின் மீது பீய்ச்சி அடித்ததால், அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் தண்ணீரில் நனைந்தன.