தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் முல்லைப் பெரியாற்றின் கரையோரம் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஜூலை 2ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து விநாடிக்கு 2,480 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஜேசிபி இயந்திரம் மூலம் மணலை கொட்டியும், மணல் மூட்டைகளையும் அடுக்கியும் உடைப்பு சரி செய்யப்படுகிறது.