நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை, காக்காச்சி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து மின்மீட்டர்கள் அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனியார் தேயிலை தோட்ட நிறுவனம் கடந்தாண்டு உற்பத்தியை நிறுத்தியதால், இங்கு பணிபுரிந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றும் வரும் நிலையில், தேயிலை தோட்ட நிர்வாகத்தில் பணிபுரியும் கிருஷ்ணசாமி, ஜான் செல்வராஜ் ஆகியோர் மின்வாரிய ஊழியர்கள் உதவியுடன் காக்காச்சி பகுதியில் உள்ள தொழிலாளர்களின் வீடு மற்றும் கிறிஸ்தவ ஆலயத்தின் கதவை உடைத்து மின் மீட்டரை அகற்றி பறிமுதல் செய்துள்ளனர்.