நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூரில் முன்னால் சென்ற பைக்கை இடிக்காமல் இருக்க பிரேக் போட்ட கார் சுழன்று சென்று கடையினுள் புகுந்து விபத்தை ஏற்படுத்திய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கன்னியாகுமரிக்கு சென்று கொண்டிருந்த கார் கீழையூர் அருகே செல்லும் போது முன்னால் பைக்கில் சென்ற நபர் வண்டியை திருப்ப முற்பட்டுள்ளார். அப்போது பைக்கில் மோதாமல் இருக்க காரை நிறுத்த முற்பட்டபோது தாறுமாறாக சென்று உணவகம் ஒன்றில் புகுந்துள்ளது. இந்த விபத்தில் உணவக பணியாளருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது.