கடலூர் காட்டுமன்னார்கோவில் அருகே காதலனின் தந்தை இறப்புக்கு காரணமான காதலியின் சகோதரர்களை கைது செய்யக் கோரி, உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். கொளக்குடி கிராமத்தில் ஒரே சமூகத்தை சேர்ந்த இளைஞரும், இளம்பெண்ணும் காதலித்து வந்த நிலையில், பெண்ணின் சகோதரர்கள் எதிர்ப்புத் தெரிவித்து காதலன் வீட்டுக்கு சென்று தகராறு செய்து, அவரது தந்தையை தாக்கியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.