சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே ஐந்து ரூபாய் நாணயத்தை சிறுவன் விழுங்கிய நிலையில் அதனை நவீன முறையில் எண்டோஸ்கோபி மூலம் அகற்றி, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்தனர். வெள்ளாண்டிவலசு பகுதியைச் சேர்ந்த அருள்முருகன் என்பவரின் மகனான திலகர் மருத்துவமனையில் செல்போனை வைத்து வீடியோ பார்த்துக் கொண்டிருந்தபோது அதிலிருந்த ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து விழுங்கியதாக கூறப்படுகிறது.