அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுவன் மதுபாட்டில்களை விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக திமுக ஒன்றிய தொண்டரணி நிர்வாகி உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். குழுமூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரிக்கரையில் மது பாட்டில்களை பையில் வைத்துக் கொண்டு சிறுவன் அமர்ந்திருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நடவடிக்கையில் இறங்கிய போலீசார், சிறுவனை, மதுவிற்க அழைத்துச் சென்றதாக அவனது மாமா அறிவானந்தம் என்பவரையும், மதுவை விற்க வழங்கியதாக செந்துறை திமுக ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் வீரா.ராஜேந்திரனையும் கைது செய்தனர்.