திருவண்ணாமலையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியில் 60-க்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். மாவட்ட விளையாட்டு அரங்கில் கல்வித்துறை சார்பில் 14, 17, 19, வயதினருக்கான சைக்கிள் பந்தயம், குத்துச்சண்டை போட்டி, பீச் வாலிபால் ஆகிய 3 போட்டிகள் நடைபெற்றன. ஒரு நிமிட இடைவெளி விட்டு தலா இரண்டு நிமிடங்கள் என மூன்று ரவுண்டுகள் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் முதலிடம் பிடித்த வீரர்கள் மயிலாடுதுறையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.