மதுரையில் எல்லை பாதுகாப்பு படை முன்னாள் வீரர் துப்பாக்கியால் தனது நெற்றியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். பாம்பன் நகர் குமரன் தெருவை சேர்ந்த முன்னாள் BSF வீரர் சிவராமன் மது குடிப்பதற்கு தனது மனைவியிடம் அடிக்கடி பணம் கேட்டு சண்டை போட்டு வந்துள்ளார். இந்நிலையில் குடிபோதையில் இருந்த அவர், தனது வீட்டில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். விநாயகர் சதுர்த்தியன்று நிகழ்ந்த இந்த தற்கொலை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் உள்ளனர்.