சென்னை சத்யம் தியேட்டரில் நடிகர் விஜய்யின் GOAT படத்திற்கான, சனி, ஞாயிற்றுக்கிழமை காட்சிகளுக்கு முன்பதிவு துவங்கிய இரண்டே மணி நேரத்தில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. விஜய்யின் GOAT படம் வரும் 5-ந் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில், காலை 9 மணிக்கு திரையிடப்படும் சிறப்பு காட்சி குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படாத சூழல் இருக்கிறது. அதோடு, தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் இடையே TERMS பிரச்சனை நிலவுவதாலும் முதல் நாள் புக்கிங் சில இடங்களில் துவங்கவில்லை. இந்த நிலையில், சென்னை சத்யம் தியேட்டரில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளுக்கான கவுண்ட்டர் டிக்கெட்டுகள் முன்பதிவு துவங்கியது. புக்கிங் துவங்கிய இரண்டே மணி நேரத்தில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்த நிலையில், வரிசையில் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.