மதுரை பேச்சிகுளம் பகுதியில் மூன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து மாணவர்கள் வாகனங்கள் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் பள்ளி வளாகம் மூலம் தீவிரமாக சோதனை மேற்கொண்ட நிலையில், மிரட்டல் விடுத்தது புரளி என தெரியவந்தது.