காரைக்கால் ஜிப்மர் மருத்துவ கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், கல்லூரி முழுவதும் நடைபெற்ற சோதனைக்கு பின் அது போலி என தெரியவந்தது. மின்னஞ்சல் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.