சென்னை, பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நள்ளிரவு, சுமார் 12 மணியளவில் மிரட்டல் வந்த நிலையில், உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டடது. இதனை தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன், சுமார் ஒன்றரை மணி நேரம் சோதனை நடைபெற்றது. சோதனையின் முடிவில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது, மிரட்டல் தகவல் அறிந்ததும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், உடனடியாக அங்கு விரைந்து வந்ததாக கூறப்படுகிறது.சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், வெடிகுண்டு வைத்திருப்பதாக தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்திற்கு தகவல் வந்துள்ளது. தொடர்ந்து, டிஜிபி அலுவலகத்தில் இருந்து, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த தாம்பரம் மாநகர காவல் ஆணையரக வெடிகுண்டு நிபுணர்கள் மூன்று பேர் கொண்ட குழு மற்றும் கானத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார், பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு விரைந்து சென்று சோதனையிட்டனர். சுமாராக, ஒன்றரை மணி நேர சோதனைக்கு பிறகு, வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்துள்ளதாக, வெடிகுண்டு நிபுணர்கள் கூறினர்.இதையும் பாருங்கள் - #BREAKING | Bomb Threat to TVK Office | தவெக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. பனையூரில் பரபரப்பு