திருச்சியிலுள்ள பிரபல புனித ஜோசப் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், சோதனை முடிவில் மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. சமீப காலமாக திருச்சியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது வாடிக்கையாகி வரும் நிலையில், பிரபல ஜோசப் கல்லூரியிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்தது.\இதனையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. ஆனால், சோதனை முடிவில் மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவரவே, தொடர்ந்து 2-வது நாளாக மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.