ஈரோடு சின்ன செட்டிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு இன்று காலை மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில் பள்ளி நிர்வாகம் விடுமுறை அறிவித்து பள்ளிக்கு வந்தவர்களை வீட்டுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பள்ளியில் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் பரபரப்பு. ஈரோட்டில் பிரபலமான தனியார் பள்ளியான ஜே சி எஸ் பள்ளி ஈரோடு மூலப்பாளையம் அடுத்த சின்ன செட்டிபாளையம் பகுதியில் இயங்கி வருகிறது இப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கல்வி பயின்றனர் இந்நிலையில் இப் பள்ளிக்கு இன்று காலை இமெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் குறித்த தகவல் கிடைத்தது. உடனடியாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பள்ளிக்கு வந்த மாணவர்களை வீட்டுக்கு திருப்பி அனுப்பியும் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்திகள் வாயிலாகும் அலைபேசி வாயிலாகவும் தகவல் ஆனது பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பள்ளியில் உள்ள வகுப்பறைகள் தோறும் சென்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளியின் வளாகம் வகுப்பறை மைதானம் உள்ளிட்ட பள்ளி முக்கிய இடங்களில் வெடிகுண்டு இருக்கின்றதா என்பது குறித்து தீவிர சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஏற்கனவே கடந்த வியாழன் அன்று இந்தியன் பப்ளிக் எனும் இன்டர்நேஷனல் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஈரோட்டில் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெற்றோர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.