சென்னை குன்றத்தூர் அருகே தனியார் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. சோமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக பள்ளி அலுவலகத்துக்கு இ மெயில் மூலம் மிரட்டல் வந்தது. பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் வெறும் புரளி என்பது தெரியவந்தது.