சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததைதொடர்ந்து நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். கோவிலம்பாக்கத்தில் உள்ள காவேரி மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்நிலையில் தாம்பர மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு மேடவாக்கம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.