வேலூர் மாவட்டம் காட்பாடியில், இரண்டு பைக்குகள் மீது மோதிய பொலிரோ கார், தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வாலாஜாவில் இருந்து ரயில்வே உபகரணங்களை ஏற்றி வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து டிவிஎஸ் மற்றும் ஹீரோ ஹோண்டா பைக்குகள் மீது மோதியதோடு, அருகில் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் டிவிஎஸ் பைக்கில் பயணித்த ராஜேந்திரன் என்பவருக்கு இரு கால்களிலும் முறிவு ஏற்பட்டது.