சேலம் மாவட்டம் மல்லூர் அடுத்த புளியந்தோப்பு பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் தொடர்பான வழக்கில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் ராஜரத்தினம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பலத்த வெட்டு காயங்களுடன் பெண் சடலத்தை மீட்ட போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டது விருநகரை சேர்ந்த ராஜாமணி என்பதும், ராஜரத்தினத்திற்கும் ராஜாமணிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ராஜரத்தினம் ராஜாமணியை கொலை செய்ததது தெரியவந்துள்ளது.