ராமேஸ்வரத்தில் காணாமல் போன நாட்டுப்படகில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், அதன் உரிமையாளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னகரம் மீனவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று நாட்டுப்படகில் மிதந்து வந்தது. இதுகுறித்து கடலோர காவல்படையினர் மேற்கொண்ட விசாரணையில் சடலம் இருந்த நாட்டுப்படகு ஓலைக்குடா பகுதியைச் சேர்ந்த பன்னீர்ச்செல்வத்திற்கு சொந்தமானது என்பதும் கடந்த 3 நட்களுக்கு முன்புதான் படகு காணாமல்போனதும் தெரியவந்தது.ஆண் சடலம் குறித்து பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடந்து வருகிறது.