திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே காணாமல் போன சிறுவன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புது கும்முடிப்பூண்டி ஊராட்சி பால யோகி நகரில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பூபாலன் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது 13 வயது மகனான டெண்டுல்கர் குமார், அருகில் உள்ள கிணற்றுக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். கிணற்று படிக்கட்டில் நின்று கொண்டிருந்தபோது டெண்டுல்கர் குமார் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்ததாகவும், உடன் சென்ற நண்பர்கள் பயத்தில் அங்கிருந்து ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. சிறுவனை காணவில்லை என அவனது பெற்றோர் பல இடங்களில் தேடிய நிலையில், நீண்ட நேரத்திற்கு பின் சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.