ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில், மீன் பிடிக்க கடலுக்கு சென்று மாயமான மீனவர் நான்கு நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டார். சீனி இப்ராம்ஷா என்ற அந்த மீனவர், கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென படகு பழுதானதால் அது கடலில் மூழ்கியது. படகில் இருந்த 3 பேர் உயிர் தப்பிய நிலையில், இப்ராம்ஷா மாயமானார்.இதையும் படியுங்கள் : பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த காதலர்கள்... பெண் வீட்டாரும், காதலனின் நண்பர்களும் தகராறு