சென்னை வேளச்சேரி ஐஐடி வளாக நுழைவு வாயிலில் அனுமதிக்க மறுத்ததால் பள்ளிகள் மாணவர்களின் பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐஐடி வளாகத்திற்குள் கடந்த வாரம் வாகனம் மோதி உயிரிழந்ததால், அவ்வளாகத்தில் இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வனவானி, கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளுக்கு மாணவர்களை அழைத்து செல்ல பெற்றோர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.