வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தராத பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கல்லூர் குறிஞ்சி நகர் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் முறையாக கழிவுநீர் கால்வாய் அமைக்காததால் கழிவுநீர் சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசுவதாகவும், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறிய அப்பகுதி மக்கள் குடியாத்தம்- பலமனேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.