கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில், வேன் ஓட்டுநர் வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் கைதான நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த கூலிப்படையினர் இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டனர். இட்லி மணி, முருகன் என்ற அந்த இருவர் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவர்களை குண்டாசில் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் உத்தரவிட்டார்.