கிருஷ்ணகிரியில் அரசு பள்ளி ஆசிரியர்களால் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து போச்சம்பள்ளியில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க கோரியும், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் வலியுறுத்தினர்.