பிரதமர் மோடியின் தாயை பற்றி காங்கிரசார் அவதூறாக பேசியதாக கூறி, விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடல் மைதானத்தில் பாஜக மகளிர் அணி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினரை, போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்று தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.இதையும் படியுங்கள் : குடியிருப்பு பகுதியில் காட்டெருமை உலா சாலைகளில் திரிந்த ஆடுகளை விரட்டிய காட்டெருமை