ராமர் பிறந்த மண்ணாக கருதப்படும் அயோத்தியில் பாஜக தோல்வியடைந்தது போல் முருகன் பிறந்த தமிழ் நாட்டிலும் பாஜக தோற்கடிக்கப்படும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் கக்கனின் பிறந்த நாளை முன்னிட்டு ராயப்பேட்டை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் அவரது திரு உருவச்சிலைக்கு செல்வப்பெருந்தகையும் கட்சியின் நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முருகப் பெருமான் தமிழ்நாட்டில் பாஜகவை புறமுதுகிட்டு ஓடவிடுவார் என்றார்.இதையும் படியுங்கள் : சென்னையின் முதல் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்..