திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை தடுத்து நிறுத்தி திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவி பாரதிஸ்ரீ, தனது ஆதரவாளர்களோடு பாஜகவினரை தடுத்து நிறுத்தி, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க கூடாது எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.