சென்னை ஆலந்தூரில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் கையெழுத்து இயக்கம் நடத்திய நிலையில் அவர்களுக்கு எதிராக இந்தி ஒழிக என திமுகவினர் முழக்கமிட்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே அங்கு விரைந்த போலீசார் திமுகவினரை தடுத்து நிறுத்த முயன்ற போது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.