செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினருக்கு, விசிகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பாஜகவினர் மாலை அணிவிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்த விசிகவினர், அப்படி மாலை அணிவிக்கும் பட்சத்தில் மத அடையாளங்களை பயன்படுத்தக் கூடாது, கட்சி பெயரையும், பிரதமர் மோடி பெயரையும் பயன்படுத்தி முழக்கமிடக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில், 1 மணி நேரம் கழித்து பாஜகவினரை மாலை அணிவிக்க அனுமதித்தனர். பின்னர் பாஜகவினரும் அமைதியான முறையில் மாலை அணிவித்து விட்டு கலைந்து சென்றனர்.