திமுகவில் உள்ளவர்களை குறிவைத்து அடிக்க பாஜக தயாராகி விட்டதாக கூறிய அமைச்சர் கே.என்.நேரு, அதில் முதல் பலி தாமாகி விட்டதாக தெரிவித்தார். திருவாரூரில் என் வாக்குச்சாவடி; வெற்றி வாக்குச்சாவடி என்ற திமுகவின் பாகநிலை முகவர்கள் கூட்டத்தில் பேசிய அவர், அடிக்க அடிக்க பந்து மாதிரி எழுந்திருக்க வேண்டுமே தவிர, விட்டுவிட்டு போக கூடாது என்று கூறினார். மேலும், எது வந்தாலும் நிற்போம் என்றும், அதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அமைச்சர் கே.என். நேரு கூறினார்.